"காதல்" எல்லைகள், கலாசாரம், மொழி, இனம் இவற்றிற்கு அப்பாற்பட்டவை என்று பல கவிகள் சொன்னது உண்டு..
அப்படி ஒரு காதல் கதை நம்ம பயலுகள ஒருத்தனுக்கும் வந்திருச்சுன்னே.. அது வேற யாரும் இல்ல. நம்ம கோவிந்தன் தான். ஒரே அலுவலகம், காலையும் மாலையும் சந்திக்க வேண்டிய நிர்பந்தம், அலுவல் தொடர்பாக ஒரு நாளைக்குள் நான்கைந்து தடவையாச்சும் பேச்சு இவை அருமையான அடித்தளம் இட.. பார்வை பரிமாறல், சிநேக புன்னகை எல்லாத்துக்கும் மேல வயசு எல்லாம் சேந்து காதல் வந்துருச்சு டோய்..
அப்பெல்லாம் பையன் அடிக்கடி மகேஷ் கிட்ட பேசறேன், மகேஷ் போன் சொல்லி சொல்லியே பேசுவான். நானும் நம்ம கிளாஸ் மேட் மகேஷ் பாபு கிட்ட தான் பேசறான்னு நம்பி இருந்தேன்.. அத உறுதி பண்ற மாதிரியே சொல்லு டா ,என்னடா அப்படின்னு தான் பேசுவான்.. காதலையும் கர்பத்தையும் மறைக்க முடியாதுன்னு சொல்லுவாங்க.. கத்திரிக்கா முத்தினா கடை தெருவுக்கு வந்து தானே ஆகணும்.
ஒரு தடவை புதுவருஷ பிறப்ப கொண்டாட நானும் நம்ம கோவிந்தன் மற்றும் சில நண்பர்கள் வெளியே சுத்திட்டு இருந்தோம். அப்போ நியூ இயர் பொறந்த வுடனே மொத போன் வருது.. இவன் ஹாப்பி நியூ இயர் மகேஷ். தேங்க்ஸ் டா அப்படின்னு சொல்றான். நான் என்னடா இவனுக்கும் மகேஷ் பாபுக்கும் அப்படி என்ன ஒரு நட்புன்னு டவுட் ஆயிட்டேன். அப்போதான் இன்னொரு பையன் சொல்றான் அது மகேஷ் பாபு இல்ல.. மகேஸ்வரி! நம்ம கோவிந்தன் ஆபீஸ்ல தான் வேலை பாக்குதுன்னு. பைய அப்போ கூட ஒத்துக்கல. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு தானா சொன்னான். எப்படியோ நல்ல இருந்த சரின்னு சொல்லிட்டேன். இது தான் பிளாஷ் பேக்.
அதுக்கு அப்புறம் கோவிந்த் வாழ்க்கைல நெறைய நல்ல மாற்றங்கள் நடந்தது. வேலைல முன்னேற்றம், தொலை தொடர்பு கல்வி மூலம் பி. சி. ஏ படிப்பு, மேலும் எம். பி . ஏ படிப்புலையும் சேந்துட்டான். (இதெல்லாம் காதலிச்சதால தான் வந்துச்சான்னு கேக்க கூடாது. அப்படி கேக்கனும்னு தோனுச்சுன்னா நம்ம கோவிந்த் கிட்டே கேளுங்க மக்களே).
சரி, இப்படியே போய்கிட்டு இருந்த போர் அடிக்கும்.. கதைல ஒரு டர்னிங் பாயிண்ட். விஷயம் மெல்ல கோவிந்த் மாமனார் வீட்ல தெரிய வர அவங்களுக்கு ஒரே சந்தேகம். இவங்க நண்பர்களா இல்ல காதலர்களா அப்படின்னு.. கொஞ்ச நாள்ளயே இவங்க காதல்தான் பண்றாங்க அப்படின்னு தெரிஞ்சு போச்சு.. விஷயம் பெருசாச்சு. இத நம்ம கோவிந்தன் எப்படி சமாளிச்சானு, கல்யாணம் எப்படி நடந்துச்சுன்னு அடுத்த போஸ்ட் ல சொல்றேன்.
தொடரும்..
Tuesday, December 1, 2009
ஏழு ஆண்டு தவம்
Posted by ராஜ சேகர் at 7:14 AM 0 comments
Subscribe to:
Comments (Atom)